மீண்டும் நீடிக்கப்படுகிறதா ஊரடங்கு..? அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை.!

மீண்டும் நீடிக்கப்படுகிறதா ஊரடங்கு..? அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை.!


modi-meets-all-stats-cm-tomorrow-in-video-call

பாரத பிரதமர் மோடி அவர்கள் நாளை அனைத்து மாநில முதல்வர்களுடனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் வரும் மே 17 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் சமீபகாலமாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதேநேரம் வைரஸ் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

modi

இந்நிலையில், நாளை மதியம் 3 மணிக்கு பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து ஆலோசிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா? ஊரடங்கு வரும் மே 17 உடன் முடிவுக்கு வருமா என்பது குறித்து இந்த ஆலோசனை கூடத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.