இந்தியா Covid-19

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை! மீண்டும் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Summary:

modi meeting with chief ministers

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,43,091 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதில் 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. 

மகாராஷ்டிராவில் மட்டும் 1,10,744 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக இருக்கிறது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்துவது முதலமைச்சர் மற்றும் கவர்னர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அதில், இந்திய மக்கள் காட்டிய ஒழுக்கத்தை உலகம் முழுவதும் நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர். இன்று இந்தியாவில் கொரோனாவுக்கு குணமடைபவர்கள் விகிதம் 50 சதவீதத்துக்கு மேல் உள்ளது. கொரோனாவுக்கு ஒருவர் இறந்தால் கூட அது துயரமானதுதான். உலகஅளவில் கொரோனா உயிரிழப்புகள் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரிவித்தார்.

இந்தநிலையில் கொரோனா உயிரிழப்புகள் அதிகமாக உள்ள தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.


Advertisement