மகள் திருமணத்திற்கு மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பிய ரிக்ஷா ஓட்டுநர்! நேரில் சந்தித்த பிரதமர் மோடி!
modi meet riksha driver

உத்தர பிரதேசத்தின் வாரணாசி பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த மங்கள் கேவத்-ரேணு தேவி தம்பதியின் மகளுக்கு கடந்த 12 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்தநிலையில், பிரதமர் மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியை சேர்ந்த ரிக்ஷா ஓட்டுனர் மங்கள் கேவத் தன்னுடைய மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளும் படி, மோடிக்கு அழைப்பிதழ் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடியிடம் இருந்து கடந்த 8 ஆம் தேதி கடிதம் ஒன்று வந்துள்ளது. இதனை கண்டு கேவத் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்தநிலையில், உத்தர பிரதேசத்திற்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடியை சந்திக்க எங்களது குடும்பம் ஆவலுடன் உள்ளது என கேவத்தின் மனைவி ரேணு தேவி கூறியுள்ளார். இந்நிலையில், மோடி வாரணாசிக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்ட போது மங்கள் கேவத்தை நேரில் சந்தித்து அவரது ஆரோக்கியம், குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்தார்.
மகள் திருமணத்துக்கு பிரதமர் மோடி வராவிட்டாலும் வாழ்த்துச் செய்தி அனுப்பியது தனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. தற்போது நேரில் சந்தித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி கேவத் தெரிவித்துள்ளார்.