மோடி வேற லெவல்: நடுகாட்டிற்குள் நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக நடைபோடும் பாரத பிரதமர்! திகைக்கும் உலகமக்கள்!

மோடி வேற லெவல்: நடுகாட்டிற்குள் நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக நடைபோடும் பாரத பிரதமர்! திகைக்கும் உலகமக்கள்!


modi in forrest


பிரிட்டனை சேர்ந்த வன ஆர்வலரும், டிஸ்கவரி உள்ளிட்ட பிரபல டிவிக்களில் காடுகள் தொடர்பான காட்சிகளை படமெடுத்து நிகழ்ச்சி வழங்குபவர் பியர் கிரில்ஸ். இவர் சமீபத்தில் உத்தரகண்ட் மாநில வனப்பகுதிக்கு சென்றுள்ளார். இவர் பிரதமர் மோடியை தன்னுடன் அழைத்து சென்றார்.

பியர் கிரில்ஸ், வனப்பகுதிக்குள் மனிதன் எவ்வாறு உயிர் வாழ முடியும் ? வனப்பகுதிக்குள் தனியாக சிக்கி கொண்டால் எவ்வாறு தற்காத்து கொள்வது , வன விலங்குகளிடம் இருந்து எவ்வாறு தப்பி வருவது , எவ்வித உபகரணமும் இல்லாமல் வெளியேறுவது எப்படி, வனத்தில் விலங்குகள் நடமாட்டத்தை தெரிந்து கொள்வது எப்படி உள்ளிட்ட விஷயங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டார். 



 

மேலும், பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதில் ‘180 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு பிரதமர் மோடி குறித்து தெரியப்போகிறது. விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வனப்பகுதிக்கு சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும்’ என பதிவிட்டிருந்தார். 

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், 'இந்தியாவில் பசுமையான காடுகள், அரிய வகை உயிரினங்கள், மற்றும் நீர் நிலைகள் உள்ளன. இந்த நிகழ்ச்சியை பார்த்தால் நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை வரும். அதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் தெரிய வரும் என பதிவிட்டுள்ளார்.