இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாடத்தில் பங்கேற்க போவதில்லை! பிரதமர் மோடி அறிவிப்பு! இது தான் காரணமா!



Modi

உலக நாடுகள் முழுவதையும் கொரோனா வைரஸ் என்ற கொடிய வைரஸ் நோயானது மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலக நாடுகள் முழுவதிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பழியாகியுள்ளனர். மேலும் 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்நோய் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதுவரை 28 பேருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும்  கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

modi

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதால், ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அதாவது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் அதிகமானோர் கூடுவதை தவிர்க்க வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் அறிவுரை கூறுகின்றனர். எனவே இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டங்கள் எதிலும் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளேன் எனத்தெரிவித்துள்ளார்.