இந்தியா லைப் ஸ்டைல்

உறவுக்கு வர மறுத்த மாடல் அழகியை கொலை செய்து வீசிய 19 வயது இளைஞர்!

Summary:

model mansi dixit murdered by young boy

மும்பையில் சாலையோரத்தில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு ஒரு பையில் அடைத்து வீசப்பட்டிருப்பதை போலீசார் கண்டறிந்தனர். விசாரணையில் 19 வயது இளைஞர் மாடல் அழகியான மன்ஷி திக்சித்தை கொலைசெய்து செய்து வீசியுள்ளது தெரியவந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய மாடல் அழகி மன்ஷி திக்சித் ஆவார். இவர் சில நாட்களுக்கு முன்பு சயத் முசாமில் என்ற 19 வயது போட்டோகிராபரை சந்திக்கச் சென்றுள்ளார். அன்று முதல் அவரை காணவில்லை. இந்நிலையில் அவர் மும்பையில் சாலையோரத்தில் ஒரு பையில் அடைக்கப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சயத் முசாமில் தான் மன்சியை கொலை செய்து வீசியுள்ளது தெரியவந்தது. அதன் பின்னர் சையதை கைது செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சயத் முசாமில் மற்றும் மன்ஷி திக்சித் இருவரும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாக பழகி உள்ளனர். மும்பையில் தங்கியிருந்த சயத் தான் ஒரு போட்டோகிராபர் என்று அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி மன்ஷி திக்சித்தை, சயத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். புகைப்படம் எடுப்பதற்காக வந்த மன்சியை வலுக்கட்டாயமாக அவருடன் உறவு கொள்வதற்காக சயத் வற்புறுத்தியுள்ளார். இதற்கு மன்ஷி மறுப்பு தெரிவிக்கவே சயத் அவரை கட்டையால் அடித்து மயக்கமுற செய்து அவருடன் உறவு கொண்டுள்ளார். பின்னர் மயக்க நிலையில் இருந்த மன்சியை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மன்சியின் உடலை ஒரு பையில் அடைத்துவிட்டு வெளியே செல்வதற்காக டாக்ஸி ஒன்றை புக் செய்துள்ளார். முதலில் வந்த டாக்சி டிரைவர் பை பெரிதாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் அந்த டாக்ஸியை ரத்து செய்த சயத் மீண்டும் வேறு ஒரு டாக்ஸியை புக் செய்துள்ளார். முதலில் ஏர்போர்ட் வரை செல்வதற்காக புக் செய்தவிட்டு இடையில் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார்.

அப்போது செல்லும் வழியில் இறங்கிய சயத் பையில் அடைத்து வைத்திருந்த அந்த பெண்ணின் உடலை சாலையோரத்தில் வீசியுள்ளார். இதனை கவனித்துக்கொண்டிருந்த டாக்சி டிரைவர் இதனை குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பின்னரே போலீசார் சயதை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
 


Advertisement