AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
டாக்ஸிக்காக காத்திருந்த மாடல் அழகி! பட்டப்பகலில் தனது பேண்ட் ஜிப்பை கழற்றி! நடுரோட்டில் அருவருப்பான செயலை செய்த இளையர்! வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்த பெண்..
பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகள் இன்று கூட பொதுவான இடங்களிலும் நடைபெறுவதை வலியுறுத்தும் ஒரு சோகமான சம்பவம் சமீபத்தில் இணையத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
மாடல் அழகி ஒருவர், ஜெய்ப்பூரிலிருந்து திரும்பியபோது காலை 11:00 மணியளவில் தனது டாக்ஸிக்காக காத்திருந்தபோது, அருகில் நின்ற ஒரு நபர் தனது பேண்டின் ஜிப்பை திறந்துவிட்டு, அவரது முன்னிலையில் சுயஇன்பம் செய்யத் தொடங்கியதாக புகார் அளித்துள்ளார். இந்தக் கேவலமான செயலை அவர் வீடியோவில் பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பெண்ணின் உணர்வுப்பூர்வ விளக்கம்
“அந்த நபர் தொடர்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் அவர் தனது பேண்ட் ஜிப்பை திறந்ததை கவனித்தேன். தொடக்கத்தில் உறைந்தேன். பதிவு செய்யவோ, எதிர்த்து நிற்கவோ முடியவில்லை. சிலர் கத்தியிருக்கலாமே எனக் கூறுகிறார்கள், ஆனால் அந்த நேரத்தில் ஒரு பெண்ணின் மனநிலை அவர்களுக்குப் புரியாது,” என்று அந்த பெண் கூறியுள்ளார். காவல் நிலைய எண்ணை ஆன்லைனில் தேடி கண்டுபிடித்த பின்னரே புகார் அளிக்க முடிந்ததாகவும் கூறினார்.
இதையும் படிங்க: நாளை உலகளவில் முடங்குகிறது இன்டர்நெட் சேவை? தி சிம்ப்ஸன்ஸ் தொடரில் தகவலால் நெட்டிசன்கள் அதிர்ச்சி.!
வீடியோ வைரல்... காவல்துறை நடவடிக்கை
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விரைவில் பரவி, பலரும் குருகிராம் காவல்துறையையும் ஹரியானா அரசையும் டேக் செய்தனர். இதையடுத்து, காவல்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டு, சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நபரை சிசிடிவி வழியாக கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம், பொதுஇடங்களில் பெண்கள் சந்திக்கும் பாதுகாப்பு பிரச்சினைகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
வீடியோ லிங்: https://www.instagram.com/reel/DM5EU5HSTxw/?utm_source=ig_embed&ig_rid=151564db-5dc6-4412-b9d5-1213e4c5f401
இதையும் படிங்க: என்ன ஒரு திறமை! மாணவர்கள் ஒன்று கூடி உருவாக்கிய இசை! அதுவும் எப்படினு பாருங்க... வைரலாகும் வீடியோ காட்சி....