யாருக்கு தமிழ் தெரியாதுன்னு சொன்னீங்க! தமிழில் வெளுத்து வாங்கிய இந்திய கிரிக்கெட் வீராங்கனை!

யாருக்கு தமிழ் தெரியாதுன்னு சொன்னீங்க! தமிழில் வெளுத்து வாங்கிய இந்திய கிரிக்கெட் வீராங்கனை!


mithali raj talk in tamil


மித்தாலி ராஜூக்கு தமிழ் தெரியாது எனக்கூறிய ரசிகருக்கு ‘தமிழ் என் தாய் மொழி’ என தமிழில் ட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளார் மித்தாலி ராஜ். 

தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகள் தான் மித்தாலி ராஜ். இவரின் தந்தை துரைராஜ் விமானப் படையில் வெளி மாநிலத்தில் பணியாற்றினார். 1999-ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கினார் மித்தாலி ராஜ்.

20 வருடங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி பல சாதனைகளை படைத்துள்ளார் மித்தாலி ராஜ். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகக் காலம் விளையாடிய வீராங்கனை மித்தாலி ராஜ். இவரின் அதிரடி ஆட்டத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மித்தாலி ராஜூக்கு தமிழ் தெரியாது அவர் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மட்டுமே பேசுவார் என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

இந்தநிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ் என் தாய் மொழி. நான் தமிழ் நன்றாக பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை” என தமிழில் ட்வீட் செய்து அசத்தியுள்ளார். மேலும் தான் ஒரு இந்தியனான பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.