100 கிமீ நடந்துசென்ற நிறைமாத கர்ப்பிணி..! சாலையில் ஏற்பட்ட பிரசவ வலி..! குழந்தை பிறந்த சில நிமிடத்தில் நடந்த சோகம்..!Migrant deliver baby in GH and baby died

ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு நடந்து செல்லும் வழியில்லையே பெண் ஒருவர் குழந்தை பெற்ற நிலையில், பிறந்த குழந்தை சில நிமிடங்களில்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலத்தை சேர்ந்த ஜதின் ராம் (19), பிந்தியா (18)  என்ற தம்பதியினர் பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் உள்ல தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளனர்.  தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வேலை இல்லாமல் இருவரும் தவித்துவந்தநிலையில், பிந்தியா 9 மாதம் கற்பமாகவும் இருந்துள்ளார்.

இதனால் சொந்த ஊருக்கு செல்ல இருவரும் முடிவு செய்து சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பயணசீட்டு கிடைக்கவில்லை. இதனால் நடந்து செல்ல முடிவு செய்த அவர்கள் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் நடந்து ஹரியாணா மாநிலத்தில் உள்ள அம்பாலா என்ற நகரை அடைந்துள்ளனர்.

அப்போது பிந்தியாவிற்கு பிரசவலி ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்த காவலர்கள் இவர்களுக்கு உதவி செய்து அருகில் இருந்த அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் பிந்தியாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

அனைவரும் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. போதிய ஊட்டச்சத்து இல்லாததே குழந்தை உயிரிழக்க கரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.