ஊரடங்கில் இரவில் திறக்கப்பட்ட நீதிமன்றம்! மெக்சிகோ பெண்ணை மணந்த இந்திய இளைஞன்!

ஊரடங்கில் இரவில் திறக்கப்பட்ட நீதிமன்றம்! மெக்சிகோ பெண்ணை மணந்த இந்திய இளைஞன்!


mexico-girl-got-marriage-with-indian-boy-at-night-in-co

ஹரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிரஞ்சன் காஷ்யப். இவருக்கு மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த டானா ஜோஹரி ஓலிவெராஸ் என்ற பெண்ணுடன் மொழி கற்கும் செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி திருமணம் செய்துகொள்ள விண்ணப்பித்திருந்தனர்.

மேலும் டானா ஜோஹாரி குடும்பத்துடன் பிப்ரவரி11-ம் தேதி மெக்ஸிகோவிலிருந்து வந்தார். இந்நிலையில் மார்ச் 18-ம் தேதி  நிரஞ்சன் மற்றும் டானா ஜோடி திருமணம் செய்துகொள்ளவிருந்தனர். ஆனால் கொரோனா பிரச்சினையால் திருமணம் நடைபெறுவது தள்ளிப் போய்கொண்டே இருந்துள்ளது. 

marriage

இந்நிலையில் நிரஞ்சன் மற்றும் டானா ஜோடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து திருமணம் செய்துகொள்ள அனுமதி பெற்றனர்.  ரோடக் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திருமணம் நடத்த அனுமதி கிடைத்தது.

அதனை தொடர்ந்து ஏப்ரல் 13,  இரவு 8 மணிக்கு ரோடக் நீதிமன்றம் திறக்கப்பட்டு இந்த காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது திருமணத்திற்கு உதவிய அனைவருக்கும் நிரஞ்சன் காஷ்யப்  மற்றும் டானா ஜோஹாரி காதல் ஜோடி நன்றி கூறியுள்ளனர்.