15 வருடமாக லிவிங் டுகெதர்.. குழந்தைகள் முன் திருமணம்.. 3 காதலிகளுடன் கெட்டிமேளம்..!

15 வருடமாக லிவிங் டுகெதர்.. குழந்தைகள் முன் திருமணம்.. 3 காதலிகளுடன் கெட்டிமேளம்..!



men-married-3-women-after-15-years-relationship

15 ஆண்டுகளாக லிவிங் டுகெதர் உறவில் இருந்த பெண்களை பழங்குடியினத்தை சேர்ந்த 42 வயது நபர் தங்களது குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நன்பூர் பகுதியில் வசித்து வருபவர் சமர்த் (வயது 42). இவர் மூன்று பெண்களை காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்யாமல் அவர்களுடன் 15 வருடங்களாக லிவிங் டுகெதரில் வசித்து வந்துள்ளார்.

இதுகுறித்து மற்றவர் கேட்கும்போது, "வறுமையின் காரணமாக நான் இன்னும் திருமணம் செய்யவில்லை. இருப்பினும் நாங்கள் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறோம். அத்துடன் எனது மூன்று காதலிகளின் மூலமாக 6 குழந்தைகள் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

Madhya pradesh

இதனையடுத்து இவர் சார்ந்த பழங்குடியின வழக்கப்படி, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டாலும், திருமணம் செய்யாதிருந்தால் இவர்களது சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என்ற நிலையில், திருமணம் செய்தால் மட்டுமே பங்கேற்க முடியும். 

இதற்காகவே அவர் திருமண அழைப்பிதழ் அச்சடித்து, தனது 3 காதலியும், தனது 6 குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். அத்துடன் இந்த திருமணத்தை காண்பதற்காக உறவினர்கள் பலரும் திரண்டு வந்துள்ளனர்.