இந்தியா

1 கோடிக்கு வாங்கிய வீட்டை இடித்து தள்ளிய நபர்! வெளியான அதிர்ச்சி காரணம்.

Summary:

Men broken 1 crore house for fight

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ரயில்வே கோட்டூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் சேகர். டைல்ஸ் வியாபாரியான இவர் தனக்கு சொந்தமான சுமார் 60 லட்சம் மதிப்புக்கொண்ட நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் சேகரின் 4 மாடி கட்டிடம் அருகே இருந்த காலி இடம் ஒன்றை அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை நடத்திவரும் வெங்ககடரமணராஜூ என்பவர் வாங்கியுள்ளார். அந்த காலி இடத்தில் வீடு கட்டுவதற்காக வெங்ககடரமணராஜூ 20 அடி வரை பள்ளம் தோண்டியுள்ளார். இதனால் அருகில் இருந்த சேகரின் வீடு ஆட்டம் கண்டுள்ளது.

இதனால், தனது வீட்டில் வாசிக்கமுடியாமல் வாடகை வீட்டிற்கு சென்றுள்ளார் சேகர். மேலும் இதுகுறித்து சேகர் வெங்ககடரமணராஜூவிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்ககடரமணராஜூ சேகரின் 60 லட்சம் மதிப்புள்ள வீட்டை 1 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளார்.

மேலும், சேகர் தன்னிடம் சண்டை போட்டதால் 1 கோடிக்கு வாங்கிய வீட்டை பொக்லைன் இயந்திரம் வைத்து தன் கண் முன்னே இடித்து தள்ளச்சொல்லியுள்ளார் வெங்ககடரமணராஜூ.

1 கோடிக்கு வாங்கிய வீட்டை சண்டையின் காரணமாக வெங்ககடரமணராஜூ இடித்து தள்ளியுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement