இந்தியா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகியை 11 முறை கத்தியால் குத்தி கொடூரக்கொலை.! நடுரோட்டில் நடந்த பயங்கரம்.!

Summary:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகியை 11 முறை கத்தியால் குத்தி கொடூரக்கொலை.! நாடு ரோட்டில் நடந்த பயங்கரம்.!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் குமார். 34 வயதான இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கமிட்டி செயலாளராக செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் சந்தீப் குமார் தனது இருச்சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து சென்ற மர்மநபர்கள் அவரை வழிமறித்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தீப் குமாரை 11 முறை சரமாரியாக குத்தியுள்ளனர்.

இந்த  தாக்குதலின் போது சந்தீப்பின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்களைப் பார்த்ததும், அவரை குத்தி கொலை செய்த 5 பேர் அங்கிருந்து தப்பி ஒட்டியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் சந்தீப்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்தீப்குமாரின் உடலை மீட்டு பிரதேபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜிஷூனு மற்றும் ஸ்ரீஜித் ஆகிய 2 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். மேலும், சந்தேகிக்கப்படும் நபர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement