லைப் ஸ்டைல்

சினிமாவையே மிஞ்சிட்டீங்களேபா.... அண்ணன்கள் செய்த காரியத்தால் மணமேடையில் கண்கலங்கிய மணமகள்..!

Summary:

சினிமாவையே மிஞ்சிட்டீங்களேபா.... அண்ணன்கள் செய்த காரியத்தால் மணமேடையில் கண்கலங்கிய மணமகள்..!

சமூக வலைத்தளத்தில் பல்வேறு வினோத, விசித்திர வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரல் ஆவது வழக்கம். அதிலும், திருமண நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வுகள் தான் ட்ரெண்ட் ஆகி வந்தது. அந்த வகையில் தற்போது ஒரு திருமண நிகழ்வில் நடந்த சுவாரசியமான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதாவது ஒரு திருமண நிகழ்வில் மணமகளின் அண்ணன்கள், அவர் மேல் அன்பு மழை பொழியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அங்கு நடந்த நிகழ்வு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. அதாவது மணமகன் காத்திருக்கும் மேடை வரை மணமகள் நடக்க மலர் இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவருடைய சகோதரர்கள் பாதையில் மண்டியிட்டு மணமகள் நடக்கத் துவங்கியவுடன்,  மலர் இதழ் பட்டும் சகோதரியின் பாதம் பாதிக்கப்படக் கூடாது என தங்கள் கைகளால் பாதத்தை தாங்குகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், லைக்ஸ்கள் குவிந்துவருகிறது.


Advertisement