தாலி கட்டும் சில நிமிடத்திற்கு முன் மணமகனை அடித்து துவைத்த மணமகள் வீட்டார்!! வைரலாகும் வீடியோ...

தாலி கட்டும் சில நிமிடத்திற்கு முன் மணமகனை அடித்து துவைத்த மணமகள் வீட்டார்!! வைரலாகும் வீடியோ...



marriage-video-KQRH7H

இரண்டு முறை  திருமணம்  செய்து மூன்றாம்  முறை திருமணம் செய்ய வந்த  மணமகனை மணமகள் வீட்டார் அடித்து துவைத்த  வீடியோ இணையத்தில் வைரலாகி  வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் முஜாமில் என்ற இளைஞர் ஒருவருக்கு திருமணம்  நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண ஏற்பாடுகள்  அனைத்தும் கோலாகலமாக  நடைபெற்று கொண்டிருந்த நிலையில், திடீரென மணமகன் வீட்டார் மணமகள் குடும்பத்தாரிடம் 10 லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுத்தால் மட்டுமே இந்த  திருமணம் நடக்கும் என்று கூறி உள்ளனர்.

இதனால் திடீரென சந்தேகம் அடைந்த மணமகள் வீட்டார் மணமகனின் பின்னணியை விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனது தெரியவந்தது. திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் மணமகனின் உண்மையை அறிந்த பெண் வீட்டார் கோபம் அடைந்து மணமகனை அடித்து துவைத்துள்ளனர்.

மேலும் மணமகனின் முந்தைய இரண்டு திருமணம் குறித்த ஆதாரபூர்வமான  புகைப்படங்களும் மணமகள்  வீட்டாற்குகிடைத்ததை அடுத்து, மணமகள் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மணமகள் வீட்டார்  கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணமகனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.