இந்தியா

எல்லையில் நடந்த திருமணம்! சில மணிநேரங்களிலேயே ஏக்கத்துடன் பிரிந்துசென்ற புதுமணஜோடி!

Summary:

Marriage done in tamilnadu kerala border

தேனி மாவட்டம், கம்பம் புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்.
இவருக்கு கேரள மாநிலம் கோட்டயம் காரப்புழா பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணுடன் நேற்று  திருமணம் நடத்த, சில மாதங்களுக்கு முன்பு  நிச்சயிக்கப்பட்டது. மேலும் திருமணத்தை இடுக்கி மாவட்டம் வாளார்டி என்ற இடத்தில், கோவிலில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மணமகன் திருமணத்திற்காக கேரளா செல்ல  ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் இ-பாஸ் அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் மணமக்களின் குடும்பத்தினர் தமிழக கேரள எல்லையான குமுளி சோதனைச்சாவடிக்கு வந்துள்ளனர். பின்னர் காவல் அதிகாரிகளிடம் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இ-பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாது என மறுத்துள்ளனர். 

இந்நிலையில் முகூர்த்த நேரத்திற்குள் திருமணத்தை முடிக்க வேண்டுமென, சோதனைச்சாவடி அருகேயே உறவினர்கள் முன்னிலையில் மணமகன் பிரசாந்த், மணமகள் காயத்ரிக்கு  தாலி கட்டினார். பின்பு இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள்.

 பின்னர் இ - பாஸ் இல்லாததால் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் திருமணம் முடிந்த சந்தோஷத்தில் இருந்த மணமக்கள் வருத்தத்துடன் வீடு திரும்பினர்


Advertisement