இந்தியா Covid-19

வீடியோ: கொரோனா பயத்தால் ரூபாய் நோட்டுகளை சோப்பு போட்டு கழுவிய விவசாயி.! வைரலாகும் வீடியோ.!

Summary:

Mandya villagers wash currency notes with soap

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடிவருகிறது.

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கிவருகிறது. இந்நிலையில், ரூபாய் நோட்டு மூலம் கொரோனா வைரஸ் தன்னை தாக்க கூடும் என அஞ்சிய கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது நிலத்தில் விளைந்த விவசாய பொருட்களை சந்தையில் விற்று, அதன்மூலம் வந்த பணத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறு கிண்ணத்தில் இருந்த சோப்பு தண்ணீரில் அலசியுள்ளார்.

500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரை தண்ணீர் அலசி, அதன்பிறகு அந்த நோட்டுகளை தனது வீட்டிற்குள் எடுத்து சென்றுள்ளார். விவசாயியின் இந்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.


Advertisement