இறந்து 5 மணிநேரம் ஆச்சு..! பிரேத பரிசோதனையின்போது சடலத்தில் கத்தியை வைத்த மருத்துவர்.! திடீரென துடித்த இதயம்..! உயிர் பிழைத்து மீண்டும் உயிர் போன திகில் சம்பவம்..!

இறந்து 5 மணிநேரம் ஆச்சு..! பிரேத பரிசோதனையின்போது சடலத்தில் கத்தியை வைத்த மருத்துவர்.! திடீரென துடித்த இதயம்..! உயிர் பிழைத்து மீண்டும் உயிர் போன திகில் சம்பவம்..!


man-was-alive-before-post-mortem-and-dead-again

மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞரின் உடல் பிரேத பரிசோதனையின் போது உயிர் வந்து மீண்டும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா ஓரன். 26 வயதாகும் ஜிதேந்திரா ஓரன் தனது வீட்டில் உள்ள கூரையை மாற்றும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு  ஜிதேந்திரா ஓரனை பரிசோதத்தித்த  மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து அவரின் உடல் RIMS என்ற மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்பட்டுள்ளது. அங்கு பிரேத பரிசோதனை தொடங்கும்முன் இறந்தவரின் இதயம் துடிப்பதை அங்கிருந்த ஊழியர் ஒருவர் பார்த்து மருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மருத்துவர் சோதித்தபோது ஜிதேந்திரா ஓரன் உயிருடன் இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் ஜிதேந்திரா ஓரன் சிகிச்சை பலனின்றி பரிதாபக உயிரிழந்தார்.

மருத்துவர்களின் அலட்சியமே ஜிதேந்திரா ஓரன் இறந்ததற்கு காரணம் என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். ஓரன் இறந்து விட்டதாக கூறப்பட்ட பின்னர் சுமார் 5 மணி நேரம் வரை அவருக்கு உயிர் இருந்துள்ளது. அப்போதே அவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என உறவினர்கள் கூறி கதறி அழுதனர்.