இந்தியா

தாலி கட்டுன புது மனைவி வீட்டில் இருக்க..! கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞன் எடுத்த விபரீத முடிவு.

Summary:

Man under home quarantine in Muzaffarnagar commits suicide

கொரோனா எச்சரிக்கையாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 21 வயது இளைஞர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டே சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதோடு சந்தேகத்திற்குரிய நபர்கள் அவர்கள் வீடுகளிலையே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியை சேர்ந்த ஆஷு என்ற 21 வயது இளைஞர் சண்டிகரில் வேலை பார்த்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்த அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்குமாறு சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

தனிமையில் இருந்த ஆஷு மனஅழுத்தம் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார், இதில் மேலும் கொடுமையான விஷயம் என்னவென்றால், இவருக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement