
man try to abuse young girl
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்து கைகளைக் கட்டி நிர்வாணமாக காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பர்தி பகுதியை சேர்ந்த 35 வயதான ஜவஹர் என்பவர் வங்கியில் தினசரி பண வசூல் செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை பணம் வசூலிக்க சென்ற வீட்டிலிருந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது அங்கு சிறுமியின் தாய் வந்துள்ளார். அவரை பார்த்து கத்தி கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் திரண்டு பொதுமக்கள் ஜவஹருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் ஜவஹரின் கைகளைக் கட்டி நிர்வாணமாக தெருவில் இழுத்துச் சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து ஜவஹரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Advertisement
Advertisement