தன்னிடம் பைக் இருந்தும் 100 கி.மீ சைக்கிளில் பயணித்து மணப்பெண்ணை கரம்பிடித்த இளைஞர்.! என்ன காரணம் தெரியுமா.?

தன்னிடம் பைக் இருந்தும் 100 கி.மீ சைக்கிளில் பயணித்து மணப்பெண்ணை கரம்பிடித்த இளைஞர்.! என்ன காரணம் தெரியுமா.?


man-travel-100-km-by-cycle-to-marry-a-girl

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் செய்துகொள்ள 100 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று திருமணம் செய்துகொண்ட சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு காரணமாக வரும் மே 3 வரை அணைத்து விதமான போக்குவரத்துகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் சில எளிமையான முறையில் நடைபெறுகிறது, சில திருமணங்கள் வீடியோ கால் மூலம் நடைபெறுகிறது.

இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள பவுதியா கிராமத்தைச் சேர்ந்தவர் கல்கு பிரஜாபதி என்ற இளைஞருக்கும், மஹோபா மாவட்டத்தில் புனியா கிராமத்தில் உள்ள ரிங்கி என்ற பெண்ணிற்கும் கடந்த மாதம் 25 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்துள்ளது.

ஆனால், ஊரடங்கு என்பதால் திருமணத்திற்கு அனுமதி கேட்டு கல்கு பிரஜாபதி மாவட்ட நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்தும் எந்த வித பதிலும் வரவில்லை. இதனிடையே திருமண நாள் நெருங்கிவிட்ட நிலையில், பெண் வீட்டார் தாங்கள் தயாராக இருப்பதாக மாப்பிள்ளையின் வீட்டாருக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து தன்னிடம் இருந்த சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு தனி ஆளாக கல்கு பிரஜாபதி  சுமார் 100 கிலோமீட்டர் தூரம் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குறித்த நேரத்தில் எளிமையான முறையில் இருவருக்கும் திருமணம் முடிந்து, பின்னர் அதே சைக்கிளில் இருவரும் மாப்பிள்ளையின் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள கல்கு பிரஜாபதி, தனது அம்மாவிற்கு உடம்பு சரியில்லாததால் உடனே திருமணத்தை நடத்தவேண்டிய கட்டாயம், அதனால்தான் ஊரடங்கு முடியும்வரை காத்திராமல் உடனே திருமணத்தை செய்தேன்.

மேலும், என்னிடம் இருசக்கர வாகனம் உள்ளது. ஆனால் என்னிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால் 100 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று திருமணம் செய்ததாக கூறியுள்ளார் கல்கு பிரஜாபதி .