அட கொடூரா..! ஆசைக்கு இணங்க மறுத்த பெண்.. 3 மாத குழந்தையை நெருப்பில் தூக்கி வீசிய நபர்.. அதிர்ச்சி சம்பவம்..

அட கொடூரா..! ஆசைக்கு இணங்க மறுத்த பெண்.. 3 மாத குழந்தையை நெருப்பில் தூக்கி வீசிய நபர்.. அதிர்ச்சி சம்பவம்..


man-throw-3-months-old-baby-on-fire

உறவுக்கு வர மறுத்த பெண்ணின் குழந்தையை நபர் ஒருவர் தீயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பெண் ஒருவர் தனது 3 மாத பெண் குழந்தையை மடியில் வைத்திருந்தவாறு வீட்டிற்கு வெளியே அமர்ந்து அங்கு எரிந்துகொண்டிருந்த நெருப்பை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததோடு கத்தி கூச்சலிட ஆரம்பித்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த அந்த நபர் அந்த பெண்ணிடம் இருந்த மூன்று மாத குழந்தையை பிடிங்கி அங்கு எரிந்துகொண்டிருந்த நெருப்பில் வீசிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

நெருப்பில் விழுந்த குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டநிலையில் தற்போது குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்றுவருகிறது. இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது, அவர்கள் புகாரை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து அந்த பெண்ணின் கணவர் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்க, தற்போது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.