இந்தியா

அட ச்சீ... ஹோட்டல் ஒன்றில் சமையல்காரர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்.! இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ.!

Summary:

அட ச்சீ... ஹோட்டல் ஒன்றில் சமையல்காரர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்.! இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ.!

தற்போதைய வாழ்க்கை முறையில் பலரும் சுத்தமான உணவு, சுகாதாரமான வாழக்கையை வாழ்ந்தாலும் கூட பெயர் தெரியாத பல வியாதிகள் பலரை தாக்குகின்றது. நாம் உண்ணும் உணவு தான் நமக்கு தேவையான பல சக்திகளை தருகின்றது. எனவே உண்ணும் உணவில் அனைவரும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். தற்போது கொரோனா காலம் என்பதால் பல உணவகங்களில் சமையல்காரர்கள் முகக்கவசம், கையுறை அணிந்துகொண்டு சமைக்கின்றனர்.

இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தில் சமையல்காரர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற வீடியோ கடந்த சில நாட்களாக சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஓட்டல் சமையல்காரர் சப்பாத்தியை சுடுவதற்கு முன்னர் அதில் எச்சில் துப்பவுதும் அதை சமைப்பதும் போல வீடியோ வைரலாகி வருகிறது.  

இந்த வீடியோவை கண்ட சிலர் அடுத்தவர் சாப்பிடும் உணவில் எச்சில் துப்புவது தவறு. அதுவும் கொரோனா காலத்தில் இப்படி செய்வது நியாயமா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், இந்த செயலை செய்தவர் பெயர் தமீசுதீன் என்பதும் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  


Advertisement