வறுமை.! சோறு இல்லை..! பிஞ்சு குழந்தையை 45 ஆயிரத்திற்கு விற்ற புலம்பெயர் தொழிலாளி..! அதிர்ச்சி தகவல்..!

வறுமை.! சோறு இல்லை..! பிஞ்சு குழந்தையை 45 ஆயிரத்திற்கு விற்ற புலம்பெயர் தொழிலாளி..! அதிர்ச்சி தகவல்..!



Man sold his daughter for 45 thousands

பெற்ற தந்தையே தனது குழந்தையை விற்றுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல், ஊரடங்கு காரணமாக பெரும்பாலான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேலை இழந்து வருமானத்திற்கு திண்டாடும் சூழல் எழுந்துள்ளது. அதிலும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசம் என்றே கூறலாம்.

இந்நிலையில் அசாம் மாநிலம் கோக்ரஜார் பகுதியைச் சேர்ந்தவர தீபக் பிரம்மா என்பவர் தனது மனைவியுடன் பல ஆண்டுகளாக குஜராத் மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து அங்கு வேலை செய்து வந்திருக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக  மீண்டும் தனது சொந்த ஊருக்கே வந்துள்ளார் தீபக் பிரம்மா.

ஆனால் அங்கும் சொந்த வீடு இல்லாத நிலையில் தனது உறவினர் வீட்டில் தாங்கியபடி வேலை தேடி வந்துள்ளார். ஆனால் அவருக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துவந்துள்ளார் தீபக் பிரம்மா. இந்நிலையில் அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குழந்தை பிறந்ததும் மேலும் செலவு அதிகரித்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தனது குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார் தீபக் பிரம்மா. இதனை அடுத்து 45 ஆயிரம் விலை பேசி தனது குழந்தையை 2 பெண்களிடம் விற்றுள்ளார் தீபக் பிரம்மா.

விஷயம் அறிந்த அவரது மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை வாங்கிய 2 பெண்கள் மற்றும் குழந்தையின் தந்தை தீபக் பிரம்மா ஆகிய மூவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் குழந்தையை மீட்டு குழந்தையின் தாயிடமே போலீசார் குழந்தையை ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.