இந்தியா

மளமளவென பற்றி எரிந்த தீ! தனிஒருவனாய் 11 பேரை காப்பாற்றிய ரியல் ஹீரோ! வெளியான பகீர் சம்பவம்!

Summary:

man save 11 persons from fire accident in delhi

டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனஜ் மண்டி பகுதியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடத்தில் பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு நேற்று அதிகாலை தீ விபத்து எற்பட்டது. அதில் ௪௩ உடல் கருகி உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர். 

அதனை தொடரந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் மின்கசிவே காரணமாகவே தீவிபத்து ஏற்பட்டது என்று தெரிய வந்துள்ளது.மேலும் அங்கு அங்கீகாரமற்ற முறையில் தானிய கிடங்கிற்குள் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. அந்த தொழிற்சாலை தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் பெறாமல் இயங்கி வந்துள்ளது.

இந்நிலையில் தீவிபத்து ஏற்பட்டது குறித்து தகவலளிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு படையினர் உடனடியா சம்பவ இடத்திற்கு விரைந்து கிடங்கிற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டுள்ளனர். 

தனது காலில் எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் ராஜீவ் சுக்லா என்ற மீட்புப்படை அதிகாரி முதல் ஆளாக அங்கு விரைந்து தீயில் சிக்கிய 11 பேரை பத்திரமாக மீட்டெடுத்து வெளியே அழைத்து வந்துள்ளார். இதனாலும் இவருக்கு பெரும் காயம் ஏற்பட்டது. அதனை பொருட்படுத்தாது செயல்பட்ட வீரருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


   


Advertisement