இந்தியா

ஒரு ஒயின் சாப்பிட ஆசைப்பட்ட இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! 1.25 லட்சம் போச்சு.

Summary:

Man orders wine bottle loses Rs 1.25 lakhs

ஒரு ஒயின் சாப்பிட ஆசைப்பட்டு வாலிபர் ஒருவர் 1.25 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றிவரும் அந்த வாலிபர் ஒயின் சாப்பிட ஆசைப்பட்டு அதற்காக வீட்டிற்கே டெலிவரி செய்யும் கடை ஒன்றை கூகிள் மூலம் தேடி அதன் வழியாக ஒரு ஒயின் ஆர்டர் செய்துள்ளார்.

உஜிவால் ஒய்ன்ஸ் இன் அந்தேரி (ஈஸ்ட்) என்னும் அந்த கடையில் இருந்து குறிப்பிட்ட இளைஞருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்துள்ளது. தாங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்வதாகவும், அதற்கான பணத்தை தாங்கள் முன்னதாகவே செலுத்தவேண்டும் என இனிமையான குரலில் பேசியுள்னனர்.

இதனை நம்பிய அந்த வாலிபரும் தனது கிரெடிட் கார்ட் நம்பர், OTP என அனைத்தையும் அந்த தொலைபேசியில் பேசியவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அடுத்த சில நிமிடங்களில் அந்த வாலிபரின் கிரெடிட் கார்டில் இருந்து சுமார் 1.25 லட்சம் பணம் சுருட்டப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போலீசார் சம்மந்தப்பட்ட கடைக்கு சென்று விசாரித்துள்ளனர். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும், எங்கள் கடை பெயரை யாரோ தப்பாக பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் புகார் கொடுத்துள்ளார்.


Advertisement