இந்தியா

டவுசரை சிறியதாக தைத்த டெய்லர்..! டவுசருடன் சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நபர்..! ஒரு வினோத வழக்கு..!

Summary:

Man mysterious police complaint

டவுசரை குட்டையாக தைத்த தையல்கடைக்காரர் மீது நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் துபே. இவர் சமீபத்தில் 2 மீட்டர் துணி எடுத்து, அதில் தனக்கு வேண்டிய அளவிற்கு டவுசர் தைத்து தருமாறு வீட்டின் அருகில் உள்ள ஒரு டெய்லரிடம் கொடுத்துள்ளார். அளவு எடுத்துக்கொண்டு, துணியை பெற்றுக்கொண்ட டெய்லர் கூலியா 70 ரூபாய் கேட்டுள்ளார்.

துபேவும் சரி என கூறிவிட்டு தனது டவுசரை வாங்க இரண்டு நாட்கள் கழித்து டெய்லரிடம் சென்றுள்ளார். அவரும் டவுசரை தைத்து தயாராக வைத்திருந்தநிலையில் துபே அதை அணிந்துபார்த்தபோது டவுசர் குட்டையாக, அதாவது சிறியதாக இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த துபே டெய்லரிடம் நான் கூறிய அளவில் ஏன் தைக்கவில்லை என தகராறு செய்துள்ளார்.

மேலும், புதிதாக துணி வாங்கி தான் கூறிய அளவில் தைத்து தருமாறு கூறியுள்ளார். அதற்கு டெய்லர் மறுப்பு தெறிக்கவே, குட்டையான டவுசருடன் நேராக காவல் நிலையத்திற்கு சென்று டெய்லர் மீது புகார் கொடுத்துள்ளார் துபே. துபே கொடுத்த புகாரை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்த நிலையில், நீங்கள் இதற்கு நிவாரணம் வேண்டுமென்றால் நீதிமன்றத்தை அணுகுமாறு ஆலோசனை கூறி அவரை திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement