இந்தியா Covid-19

மேடம்..! உங்க அந்தரங்க உறுப்பில் இருந்து மாதிரி எடுக்கனும்..! கொரோனா பரிசோதனைக்கு சென்ற 23 வயது பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி.!

Summary:

Man misbehaved with girl who went for corona test

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவதற்காக சென்ற இளம் பெண் ஒருவரிடம் லேப் டெக்னீசியன் தவறான முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அமராவதி பகுதியில் வேலை பார்த்துவந்த 23 வயது இளம் பெண் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்துகொள்வதற்காக அந்த பகுதியில் இருந்த ஒரு பரிசோதனை மையத்திற்கு சென்றுள்ளார். அந்த பெண்ணை அமரவைத்து அவரது மூக்கில் இருந்து சளி மாதிரிகளை எடுத்துள்ளார் லேப் டெக்னீசியன்.

சளி மாதிரியை சோதனை செய்துவிட்டு, உங்களுக்கு கொரோனா இருப்பதாகவும், துல்லியமான பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்றால் உங்கள் பிறப்புறுப்பில் இருந்து மாதிரிகள் எடுக்கவேண்டும் எனவும், அந்த சோதனையில் கொரோனா உள்ளதா, இல்லையா என்பது தெளிவாக தெரிந்துவிடும் எனவும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

முதலில் இதற்கு தயங்கிய அந்த இளம் பெண், வேறு யாராவது பெண் ஊழியர்கள் உள்ளனரா என கேட்டுள்ளார்.யாரும் இல்லை என அந்த டெக்னீசியன் பதில் கூற, வேறு வழியில்லாமல் அந்த பெண் அந்த பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண்ணை தனி அறைக்கு அழைத்துச்சென்று அவரது பிறப்புறுப்பில் இருந்து மாதிரிகளை எடுப்பதுபோல் நாடகமாடி, பின்னர் உங்களுக்கு கொரோனா இல்லை என கூறி அந்த பெண்ணை அங்கிருந்து அனுப்பியுள்ளார்.

இதில் சந்தேகமடைந்த அந்த பெண், இதுகுறித்து தனது சகோதரிடம் கூற, அவர் இது குறித்து தெரிந்த மருத்துவர்களிடம் விசாரித்துள்ளார். இப்படி ஒரு கொரோனா பரிசோதனை இல்லை என தெரியவர, அந்த பெண் சம்மந்தப்பட்ட லேப் டெக்னீசியன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த லேப் டெக்னீசியன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement