இந்தியா

காதலியை திருமணம் செய்வதற்காக, முதல் மனைவிக்கு கணவன் கொடுத்த சர்ப்ரைஸ்!

Summary:

man married two girl at a time


சத்தீஷ்கரில் சி.ஆர்.பி.எஃப்பில் பணிபுரியும் நபர் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கரில் உள்ள பக்தோல் கிராமத்தை சேர்ந்தவர் அனில் பைகரா. இவர் சி.ஆர்.பி.எஃப்பில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் அந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை.

இந்நிலையில் அதே ஊரில் அங்கன்வாடியில் பணிபுரியும் ஒரு பெண்ணை அனில் காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில், அனில் அவரது மனைவியுடன் செலவிடும் நேரத்தை விட அதிக நேரத்தை தனது காதலியிடம் செலவிட்டு வந்தார்.

marriage க்கான பட முடிவு

இந்நிலையில் நேற்று அனில் தனது காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதே நேரத்தில் அனில் அவரது மனைவியையும் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து அனில் கூறுகையில், எனது முதல் மனைவி மூலம் குழந்தை பிறக்கவில்லை அதனால் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என கூறியுள்ளார்.


Advertisement