தாயின் முறையற்ற பழக்கத்தால் நடந்த பயங்கரம்! பரிதாபமாக போன 2 உயிர்கள்! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

தாயின் முறையற்ற பழக்கத்தால் நடந்த பயங்கரம்! பரிதாபமாக போன 2 உயிர்கள்!

தெலுங்கானாவில்  புவனகிரி நகரைச் சேர்ந்த கல்யாண் ராவ்  என்பவர் அனந்த பூர் மாவட்டத்தை சேர்ந்த அனுஷா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில், கல்யாண் ராவின் மனைவி அனுஷாவிற்கு செல்போன் கடை ஒன்றில் கருணாக்கர் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் நட்பு நாளடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது. அப்போது, கருணாகர் தனது நெருங்கிய நண்பரான ராஜசேகர் என்பவரை அனுஷாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதையடுத்து ராஜசேகரிடம் பழகி வந்தஅனுஷா, கருணாக்கரை தவிர்க்க துவங்கியுள்ளார்.

இதனால் கருணாக்கருக்கு, ராஜசேகர் மீது கோபம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜசேகரை கொலை செய்ய முடிவு செய்த கருணாக்கர் கத்தியுடன் ராஜசேகரை தேடி, அனுஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவரைப் பார்த்ததும், ராஜசேகர் அனுஷாவின் மகளின் அறையை பூட்டி ஒளிந்து கொண்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த கருணாகர் அங்கிருந்த அனுஷாவின் 5 வயது மகளை குத்திவிட்டு, அதன் பின் கத்தியால் தன்னைத் தானே அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்துகு அனுஷாவின் மகள் மருத்துவமனையில் சிகிசைப்பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கருணாகர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதனையடுத்து போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர். இந்தநிலையில் தனது ஒரே மகளை, மனைவியின் முறையற்ற பழக்கத்தால் இழந்து விட்டோம் என வேதனையடைந்து கடந்த சனிக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் கல்யாண் ராவ்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo