
தனது ஆசைக்கு இணங்க மறுத்த 13 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ இளைஞனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது ஆசைக்கு இணங்க மறுத்த 13 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ இளைஞனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனது குடும்ப வறுமை காரணமாக ஒரு வீட்டிற்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். அந்த வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவன் அந்த சிறுமி மீது ஆசைப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமியிடம் அடிக்கடி சில்மிஷம் செய்வதும் தனது ஆசைக்கு இணங்குமாறும் வற்புறுத்தி வந்துள்ளான் அந்த இளைஞன். ஆனால் அந்த சிறுமி மறுத்து வந்த நிலையில் சிறுமியை அடித்து துன்புறுத்தி தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியும் உள்ளான்.
ஆனால் அந்த சிறுமி அதற்கும் அசைவு கொடுக்கவில்லை. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞன் சிறுமியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியதாக கூறியுள்ளனர்.
ஆனால் பாதி எரிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி கண் விழித்து நடந்த உண்மையை கூறியுள்ளார். அதனையடுத்து போலீசார் அந்த சைக்கோ இளைஞனை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அனைத்து பெண்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement