குடிபோதையில் போலீஸையே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞர்! வைரல் வீடியோ

குடிபோதையில் போலீஸையே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞர்! வைரல் வீடியோ


Man hugged and kissed policeman in festival

தெலுங்கானாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பொன்னாலு திருவிழா கூட்டத்தில் இளைஞர் ஒருவர் போலீஸ் எஸ்ஐயை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். 

தெலுங்கானா மாநிலம் நலகுண்டா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொன்னாலு என்ற புகழ்பெற்ற திருவிழா நடைபெற்றது. மக்கள் அதிகமாக கலந்துகொள்ளும் இந்த திருவிழாவிற்கு நலகுண்டா எஸ்ஐ மகேந்திரன் தலைமையில் போலீசார் பந்தாபஸ்து கொடுத்துள்ளனர். 

சாமி ஊர்வலத்தின் போது பானு என்ற இளைஞர் நல்ல குடிபோதையில் தனது நண்பர்களுடன் சாலை ஓரத்தில் நடணமாடிக் கொண்டிருந்தார். பானு ஒரு வங்கி ஊழியர். 

Telangana

அப்போது அந்த வழியே கடந்து சென்ற எஸ்ஐ மகேந்திரனை பானு என்ற அந்த இளைஞர் திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த எஸ்ஐ பானுவை எதுவும் செய்யாமல் கடந்துவிட்டார். 

ஆனால் அந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து பானுவை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர். பொது இடத்தில் தவறாக நடந்து கொண்டதற்காக அவர்மீது IPC பிரிவு 353ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.