இந்தியா

பார்க்கும்போதே கதி கலங்குது!! தலைக்கேறிய போதையில் 50 அடி உயர குடிநீர் தொட்டி மீது ஏறி நடனமாடிய நபர்.. பரபரப்பு சம்பவம்..

Summary:

குடிபோதையில் நபர் ஒருவர் 50 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறி நின்று நடனமாடிய சம்பவம் பரபரப்ப

குடிபோதையில் நபர் ஒருவர் 50 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறி நின்று நடனமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை தலைக்கேறிவிட்டால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சிலர் ஆபத்துகளை தேடி போவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஹோலி பண்டிகையை கொண்டாடிய உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார்.

ஒருகட்டத்தில் போதை தலைகேறவே, அந்த நபர் அங்கிருந்த 50 அடி உயர தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று, தனக்கு பிடித்தமான பாடல் ஒன்றை தொலைபேசியில் போட்டுவிட்டு, அந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதீத போதையால் அந்த நபர் அங்கும் இங்கும் தள்ளாடியுள்ளார், இதனை பார்த்த அங்கிருந்த சிலர் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து அங்கு வந்த போலீசார், தண்ணீர் தொட்டி மீது ஏறி அந்த நபரை பத்திரமாக கீழே கூட்டிவந்தனர். இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட, அந்த வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கியது.

Video link: https://www.india.com/viral/viral-video-up-man-under-influence-of-alcohol-climbs-water-tank-does-a-hilarious-drunk-dance-watch-video-4552601/


Advertisement