முதலிரவு முடிந்ததும் புது மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடூரம்! இப்படியா செய்வது?



Man gives triple talaq within 24 hours of marriage

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஒருபக்கம் அரங்கேறி வரும் வேளையில் வரதட்சணை என்ற பெயரில் மற்றொருபுறம் கொடுமை நடந்துவருகிறது. வரதட்சணை கொடுமைகள் ஓரளவுக்கு குறைந்துவிட்டாலும் இன்னும் ஒருசில இடங்களில் இதுபோன்ற கொடுமைகள் நடந்துதான் வருகிறது.

இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் அலாம் என்ற வாலிபருக்கு, பனோ என்ற பெண்ணிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இதில், பெண் வீட்டார் மணமகனுக்கு தருவதாக கூறிய வரதட்சணையில் இரு சக்கர வாகனத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது.

Crime

இதனால் திருமணம் முடிந்து அன்று இரவு முதலிரவு முடிந்த கையோடு மணமகன், மணமகளிடம் மூன்றுமுறை தலாக் சொல்லி விவாகரத்து செய்துள்ளார். திருமணம் முடிந்து 24 மணி நேரத்திற்குள் மணமகன் இப்படி செய்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மணமகள் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்டார் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.