இப்படி ஒரு சோகம் யாருக்கும் நடக்க கூடாது.. முதல் மாடியில் இருந்து தலைகீழாக விழுந்த நபரை.. நொடியில் காப்பாற்றிய ஹீரோ..
மாடியில் இருந்து மயங்கி சரிந்துவிழுந்தவரை அருகில் இருந்த நபர் காப்பாற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகேயுள்ள வடகாரா என்ற பகுதியை சேர்ந்த பாபு என்பவர் அந்த பகுதியில் உள்ள கிராம வங்கி ஒன்றுக்கு பணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியில் கூட்டமாக இருந்ததால் பாபு முதல் மாடியில் உள்ள சுவற்றில் சாய்ந்தவாறு காத்திருந்தார்.
அவருக்கு அருகில் பினு என்ற மற்றொரு நபரும் காத்திருந்தநிலையில், பினுவும் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்தவாறு நின்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதில் பினு நிலைதடுமாறி தலைகீழாக கீழே சரிந்தார். பினு கீழே சரிவதை பார்த்த பாபு உடனே அவரது கால்களை பிடித்துக்கொண்டார்.
உடனே அங்கிருந்த அனைவரும் ஓடிவந்து பினுவின் கால்களை பிடித்து அவரை உயிருடன் மீட்டனர். பினு கீழே சரிவதை பாபு பார்க்காமல் இருந்திருந்தால் பினு தலைகீழாக விழுந்து கழுத்து உடைந்தோ அல்லது தலை சிதறியோ இறந்திருக்க கூடும். ஆனால் கண்ணிமைக்கும் நொடியில் கடவுள்போல பாபு அவரை காப்பாற்றியதால் அதிர்ஷ்டவசமாக பினு உயிர்தப்பினார்.
நம்மிலும் பலருக்கு இந்த பழக்கம் உள்ளது. சுவரை பார்த்தாலே சாய்ந்துகொள்வது, சுவரில் ஏறி அமர்ந்துகொள்வது போன்ற பழக்கம் உண்டு. பல நேரங்களில் நமது வசதிக்காக இப்படி செய்தாலும், கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல் பினுவுக்கு நடந்ததுபோல் யாருக்கு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
எனவே இனியும் இதுபோன்ற அசம்பாவிதம் யாருக்கும் நடக்க கூடாது. இந்த வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து அனைவர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
இப்படி பழக்கமிருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள்... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! | #Kerala | #Kozhikode | #SocialAwareness pic.twitter.com/fSUbSNGxNK
— Polimer News (@polimernews) March 19, 2021