இந்தியா

விமானம் புறப்பட சில நிமிடம் முன் ஓடுபாதையில் இளைஞர் செய்த காரியம்! அதிர்ச்சியான பயணிகள்.

Summary:

Man entered into flight runway in mumbai

இந்தியாவில் தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்த நிலையில் விமானத்தின் ஓடு பாதையில் இளைஞர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட பயணிகளுடன் தயாராக இருந்தது. விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் விமான நிலையத்தில் இருந்த அத்தனை பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் திடீரென விமானத்தை நோக்கி ஓடிவந்தார்.

இதைக்கண்ட விமானி சாதுரியமாக விமானத்தின் எஞ்சினை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

இத்தனை பாதுகாப்பையும் மீறி அந்த இளைஞர் எப்படி விமானத்தின் ஓடுபாதைக்குள் உள் நுழைந்தார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்றும் அவரது பெயர் கம்ரான் என்பதும் தெரியவந்துள்ளது. 


Advertisement