இந்தியா

காலையில் 40 சப்பாத்தி, மதியம் 10 தட்டு சாப்பாடு..! இம்புட்டு சாப்பிடும் பசிப்பதாக கூறும் கொரோனா தனிமை முகாமில் இருக்கும் தொழிலாளி..! அதிர்ச்சியில் அதிகாரிகள்..!

Summary:

Man eat 40 chappathi and 10 plate meals in corono ward

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் தினமும் காலை 40 சப்பாத்தியும், மாலை 10 தட்டு சாப்பாடும் சாப்பிடுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிஹாரின் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனூப் ஓஜா (23). ராஜஸ்தானில் பணியாற்றி வந்த அவர், ஊரடங்கால் வேலை இழந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வெளிமாநிலத்தில் இருந்து வந்ததால் வழக்கமான நடைமுறைப்படி அனூப் ஓஜா தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

முகாமில் உள்ள நபர்களுக்கு அரசு இலவச சாப்பாடு வழங்கிவரும்நிலையில் காலை அனைவர்க்கும் சப்பாத்தி வழங்கப்பட்டுள்ளது. அதில் தனி ஆளாக 40 சப்பாத்தியை சாப்பிட்டுவிட்டு போதவில்லை என கூறியுள்ளார் அனூப் ஓஜா. அதன்பின்னர் மதியம் வழங்கப்பட அரசி சாதத்தில், 10 தட்டு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மேலும் பசிப்பதாக கூறியுள்ளார் அனூப் ஓஜா.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சமையல்காரர், இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து அவரை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் முகாமுக்கு சென்றுள்ளனர். அப்போது, காலையில் 40 சப்பாத்தி, மதியம் 10 தட்டு சாதம், மாலையில் 88 லிட்டிகளை (பிஹார் தின்பண்டம்) சாப்பிட்டுள்ளார் அனூப் ஓஜா.

இதனை பார்த்து அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது அனூப் ஓஜா செய்யும் அட்டகாசங்கள் வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement