இந்தியா வர்த்தகம் லைப் ஸ்டைல் டெக்னாலஜி

இதுதான் அதிர்ஷ்டமா?? 1 மணி நேரத்தில் 101 கோடி சம்பாதித்த நபர்!! எப்படி தெரியுமா??

Summary:

இதுதான் அதிர்ஷ்டமா?? 1 மணி நேரத்தில் 101 கோடி சம்பாதித்த நபர்!! எப்படி தெரியுமா??

நபர் ஒருவர் 1 மணி நேரத்தில் 101 கோடி சம்பாதித்த சம்பவம் கேட்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பங்குசந்தை குறித்து அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இணையதள வளர்ச்சிக்கு பிறகு இன்று சாமானிய மக்களுக்கு கூட பங்குசந்தை குறித்தும், அதில் வரும் வருமானம் குறித்தும் பல தகவல்கள் தெரிந்துள்ளது. அதேபோல் சாமானிய மக்கள் கூட இன்று பங்குசந்தையில் முதலீடு செய்யும் அளவிற்கு வளர்த்துள்ளனர்.

இந்த பங்குச்சந்தை வர்த்தகமானது பலருக்கு பல நேரங்களில் அதிர்ஷ்டத்தையும், அதேநேரம் மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பங்குசந்தையில் ஏற்பட்ட இழப்பால் பலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களையும் நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில், பங்கு சந்தையில் முதலீடு செய்து, 1 மணி நேரத்தில் 101 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் நபர் ஒருவர். இந்த சம்பவம் வேறு எங்கும் இல்லை, நம்ம நாட்லதான் நடந்துள்ளது. பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஊறிய முன்னணி முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா என்பவர் தீபாவளி தினத்தில் முகூர்த்த நேரமான மாலை 6:15 முதல் 7:15 மணி வரை மட்டுமே சிறப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டு அந்த 1 மணி நேரத்தில் மட்டும் ரூ.101 கோடி சம்பாதித்துள்ளார்.

இந்தியன் ஹோட்டல்ஸ். டாடா மோட்டார்ஸ், கிரிசில் நிறுவன பங்குகளில் அவர் அவர் வைத்திருந்த ஷேர்ரின் மதிப்பு அந்த நேரத்தில் அதிகரித்த நிலையில் அவருக்கு இந்த ஆதாயம் கிடைத்துள்ளது.


Advertisement