இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை பார்த்தபடியே தூங்கிய வாலிபர்.! மாரடைப்பால் மரணம்.!Man dies hours after watching India-Australia T20 cricket match

ஹைதராபத்தை சேர்ந்த சந்திரசேகர ரெட்டி என்பவரின் மகன் அபிஜித்.  22 வயது நிரம்பிய இவருக்கு துபாயில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் சமீபத்தில் வேலை கிடைத்துள்ளது. இந்தநிலையில் அடுத்த மாதம் அந்த பணியில் அபிஜித் சேரவிருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டியை இரவில் பார்த்துவிட்டு அபிஜித் தூங்கியுள்ளார். அதிகாலை 2 மணியளவில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை ஹைதர்குடாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகு, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அபிஜித்துக்கு பெரிதாக எந்தவொரு உடல்நலப்பிரச்சனைகளும் இல்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.