இந்தியா

போன வாரம் சாப்பிட்டது..! கண்ணை மூடிய கொடூர பசியால் சாலையிலேயே சரிந்துவிழுந்து இறந்த தொழிலாளி..! கண்கலங்க வைக்கும் சம்பவம்.!

Summary:

Man died due to hungry while waling on road

என்டிடிவி இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பசிக்கொடுமையால் சாலையில் மயங்கி விழுந்து உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு சென்று புலம்பெயர் தொழிலார்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல கடும் சிரமப்பட்டுவருகின்றனர். சிலர் நடைப்பயணமாகவும், சிலர் சைக்கிள், லாரி என கிடைத்த வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு திரும்பிவருகின்றனர்.

இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 60 வயதான விக்ரம் என்ற புலம்பெயர் தொழிலாளி ஒருவர், தனது குடும்பத்துடன் ஒரு நான்கு சக்கர வாகனத்தின் மூலம் மஹாராஷ்டிராவில் இருந்து உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹார்டோய் மாவட்டத்திற்கு புறப்பட்டுள்ளார்.

விக்ரம் கடந்த வெள்ளிக்கிழமை உணவு உண்டதாக கூறப்படும் நிலையில், வாகனத்தில் வரும் போது வெறும் பிஸ்கெட் மற்றும் தண்ணீரை குடித்து நாட்களை கழித்துள்ளார். இதனால் அவரது உடல் மிகவும் பலவீனமாகியுள்ளது. இதனிடையே உத்திரபிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டத்திற்கு காலை 3 மணிக்கு வந்த விக்ரம் தனது சொந்த மாவட்டமான ஹார்டோய் மாவட்டத்திற்கு நடந்து செல்ல தீர்மானித்துள்ளார்.

இதனை அடுத்து குடும்பத்துடன் நடந்துகொண்டிருந்தபோது விக்ரம் திடீரெனெ மயங்கி கீழே விழுந்துள்ளார். கொடூர பசி மற்றும் உடல் சோர்வு காரணமாக சாலையில் மயங்கி விழுந்த விக்ரம் அதே இடத்தில் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.


Advertisement