தேர்வில் நூதன முறையில் பிட்டு அடித்த இளைஞர்..! கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த சோகம்..! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

தேர்வில் நூதன முறையில் பிட்டு அடித்த இளைஞர்..! கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த சோகம்..!

பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. அனைவரும் ஆர்வமாக தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போது தனஞ்செஜ் குமார் என்ற வாலிபர் மட்டும் ஏதோ முனுமுனுத்துகொண்டே இருந்துள்ளார். இதனால் அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

உடனே அவரை அழைத்து சோதனை செய்ததில் செல்போனில் இயர் போனை சொருகி யாரிடமோ கேள்விகளுக்கு விடை கேட்டு எழுதி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக தனஞ்செய் குமார் இயர்போனை காதுக்குள் திணித்துள்ளார்.

இதில் இயர் போன் காதுக்குள் சிக்கிக்கொண்டதில் தனஞ்செய் குமார் வலியால் துடித்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். காவலர் தேர்வில் இளைஞர் ஒருவர் நூதன முறையில் பிட்டு அடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo