உதவிக்குகூட யாரும் வரல!! இறந்த மனைவியின் சடலத்தை தனி ஆளாக தூக்கிச்சென்ற கணவன்.. வீடியோ..



Man carry his wife dead body in Odisha viral video

உயிரிழந்த மனைவியின் சடலத்தை கணவன் தனிஆளாக தூக்கிச்சென்ற காட்சிகள் பார்ப்போரை கண்கலங்கவைத்துள்ளது.

ஒடிசாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நபர் ஒருவர் தனது மனைவியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தநிலையில், அவர் மாரடைப்பினால் உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த அவரது சடலத்தை 2 வது மாடியில் இருந்து கீழே இருக்கும் வாகனத்திற்கு எடுத்துச்செல்ல மருத்துவமனை ஊழியர்கள் யாரும் உதவாததால், இறந்தவரின் கணவனே, தனி ஆளாக தனது மனைவியை தூக்கிச்சென்று வாகனத்தில் ஏற்றும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.