பெற்ற குழந்தைகளுக்கு உணவு கூட வழங்க முடியாத வறுமை.. முதல்வர் வீட்டிற்கு முன்பு தீக்குளித்த தந்தை!

பெற்ற குழந்தைகளுக்கு உணவு கூட வழங்க முடியாத வறுமை.. முதல்வர் வீட்டிற்கு முன்பு தீக்குளித்த தந்தை!


man-burnt-himself-infront-of-cm-residence

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பலர் தங்களது வேலையினை இழக்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக சட்டிஸ்கர் மாநிலத்தில் 27 வயது தந்தை முதல்வரின் இல்லத்திற்கு முன்பு தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டிஸ்கர் மாநிலம் தாம்தாரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்தேவ் சின்கா. 27 வயதான இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி தொழில் செய்பவர்கள்.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல்வேறு பகுதிகளில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் இந்த தம்பதியினர் வேலைவாய்ப்பின்றி தவித்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே குழந்தைகளுக்கு சாப்பாடு கூட கொடுக்க முடியாமல் தவித்துள்ளனர்.

chhattisgarh fire

இதனால் ஹர்தேவ் சின்கா கடந்த திங்கட்கிழமை சட்டிஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகளை சந்தித்து உதவி கேட்க அவரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். ஆனால் உரிய அனுமதி இல்லை என்று காரணம் கூறி காவலாளி அவரை உள்ளே விடவில்லை.

அதனை தொடர்ந்து திங்கட்கிழமை மதியம் திடீரென ஹர்தேவ் சின்கா முதல்வரின் வீட்டிற்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். தற்போது தீ காயங்களுடன் உள்ள ஹர்தேவ் சின்காவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.