குடிபோதையில் இருந்த இளைஞனால் பாம்புக்கு நேர்ந்த கதி! பின்னர் பெற்றோர் செய்த காரியம்!
குடிபோதையில் இருந்த இளைஞனால் பாம்புக்கு நேர்ந்த கதி! பின்னர் பெற்றோர் செய்த காரியம்!

உத்திரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் வீட்டில் மது அருந்திவிட்டு குடி போதையில் ஜாலியாக இருந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஓன்று குடிபோதையில் இருந்த ராஜ்குமாரை கடித்துள்ளது.
இதனால் பாம்பு மீது கோபமடைந்த ராஜ்குமார் என்னய்யா கடிக்கிற என்று கூறி, அந்த பாம்பை பிடித்து கடித்து துப்பியுள்ளார். இதில் அந்த பாம்பு சம்பவ இடத்திலையே உயிரிழந்தது. மேலும், பாம்பின் விஷம் ராஜ்குமாரின் உடலில் வேகமாக பரவியதை அடுத்து அவர் மயங்கி விழுந்தார்.
இந்நிலையில் ராஜ்குமாரை மீட்டு அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ராஜ்குமாரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் அவர் கடித்த பாம்பை நல்ல முறையில் அடக்கம் செய்தால் ராஜ்குமாரின் உடல்நிலை சரியாகும் என சிலர் கூறியுள்ளனர்.
அதனால், ராஜ்குமாரின் உடல்நிலை சரியாகவேண்டி அவர் கடித்து துப்பிய பாம்பை அவரது பெற்றோர் அடக்கம் செய்துள்ளனர்.