பாழடைந்த கட்டிடம்..! கஞ்சா போதையில் இளம் ஜோடி..! எட்டி பார்த்த சுப்ரமணியத்துக்கு உடம்பெல்லாம் வெலவெலத்து போச்சு.!
பாழடைந்த கட்டிடம்..! கஞ்சா போதையில் இளம் ஜோடி..! எட்டி பார்த்த சுப்ரமணியத்துக்கு உடம்பெல்லாம் வெலவெலத்து போச்சு.!

கஞ்சா போதையில் இளைஞரும், இளம் பெண் ஒருவரும் மனித தலையை நெருப்பில் சுட்டு சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவர் தனது வீட்டின் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு கோணிப்பை இருப்பதை பார்த்துள்ளார். அது என்னவென்று அருகில் சென்று சுப்ரமணியம் பார்த்தபோது பைக்குள் மனித தலை ஒன்று இருந்துள்ளது.
இதனால் பயந்துபோய் பையை அங்கையே வைத்துவிட்டு தனது வீட்டிற்குள் சென்றுவிட்டார் சுப்ரமணியம். அந்த பை யாருடையது, அதை யார் அங்கு வைத்தது, அடுத்து என்ன நடக்கிறது என அந்த பையை கவனித்தவாரே தனது வீட்டிற்குள் இருந்தபடி நோட்டமிட்டுள்ளார் சுப்ரமணியம்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த ராஜு என்ற இளைஞர் அந்த பையை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் பாழடைந்த கட்டிடம் ஒன்றுக்குள் சென்றுள்ளார். இதனை கவனித்த சுப்ரமணியம் ராஜூவை பின்தொடர்ந்து சென்று அவர் என்ன செய்கிறார் என கவனித்துள்ளார்.
பைக்குள் இருந்த தலையை வெளியே எடுத்து அடுப்பில் நெருப்பு பற்றவைத்து தலையை நெருப்பில் சுட ஆரம்பித்துள்ளார் ராஜு, சிறிது நேரத்தில் அங்கு ஒரு பெண்ணும் வர, இறுதியில் இருவரும் நெருப்பில் சுட்ட தலையை ஆளுக்கு பாதியாக பிய்த்து சாப்பிட தொடங்கியுள்ளனர்.
இதனை பார்த்து பயத்தில் வெலவெலத்துப்போன சுப்ரமணியம் உடனே அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ந்துபோன போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜூவையும், அவர் உடன் இருந்த பெண்ணையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தந்தை இரண்டுவிட்டநிலையில், தாய் பிரிந்துசென்றுவிட்டநிலையில் ராஜு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, போதைக்கு அடிமையாகி சுற்றி திரிந்ததாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் அந்த பையில் இருந்த தலை யாருடையது? அவரை யார் கொலை செய்தது? அந்த தலை மட்டும் எங்கிருந்து ராஜுவுக்கு கிடைத்தது? ராஜுவே யாரையாவது கொன்றுவிட்டாரா? அல்லது சுடுகாட்டில் இருந்து ஏதாவது ஒரு பிணத்தை எடுத்து கொண்டு வந்தாரா? என்கிற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.