இந்தியா வீடியோ

ரயில்வே பாலத்தில் செல்லும் பெண்களை திடீரென கட்டிப்பிடித்து, முத்தம் கொடுக்கும் ஆசாமி! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வீடியோ!

Summary:

man accused of brazenly women on a railway bridge at Matunga

மும்பை மதுங்கா பகுதியில் ரயில் பாலத்தில் நபர் ஒருவர், அங்கு நடந்து வரும் பெண்களை தாக்கி பின்னர் அவர்களை பிடித்து முத்தமிடுவது போன்ற தொடர் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை சிசிடிவி காட்சியின் மூலம் கண்டறிந்த போலீசார்கள் அவரை பெண் ஒருவருக்கு முத்தம் கொடுக்க சென்றபோது அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் அந்த நபர் உத்திரப்பிரதேசம் பகுதியைச் சேர்ந்த ரைஜுர் ஹபிபூர் கான் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.ரைஜுர் தச்சர் வேலைக்காக மும்பை வந்துள்ளார் என கூறப்படுகிறது.

man accused of brazenly molesting women on a railway bridge at Matungaக்கான பட முடிவுகள்

இந்நிலையில் ரைஜுர் மீது வழக்கு பதிவு செய்ய எந்த பெண்களும் முன்வரவில்லை. இந்நிலையில் போலீசார்கள் தற்போது இத்தகைய பாலியல் வன்கொடுமையாளர் மீது பெண்கள் அச்சமின்றி முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர் மேலும் இதுதொடர்பாக புகார் அளிக்கும் பெண்களின் அடையாளம் வெளியிடப்படாது எனவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

 மேலும் பெண்கள் புகார் அளிக்காவிட்டால் அவருக்கு எதிரான வழக்கை தாக்கல் செய்வது குறித்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement