நான் எத்தனையோ பிரதமரை பார்த்திருக்கிறேன்.! ஆனால் இவரைப்போன்ற இரக்கமற்ற பிரதமரை நான் பார்த்ததே இல்லை.! பொங்கிய மம்தா.!

நான் எத்தனையோ பிரதமரை பார்த்திருக்கிறேன்.! ஆனால் இவரைப்போன்ற இரக்கமற்ற பிரதமரை நான் பார்த்ததே இல்லை.! பொங்கிய மம்தா.!


mamtha talk about modi

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடிக்கடி மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்க்கும், பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலை சந்திக்கின்றன. 

Mamtha

அம்மாநிலத்தில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரு கட்சி தலைவர்களும் மாறிமாறி ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பர்ப மதினிப்பூர் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் 7 முறை மக்களவை எம்.பி.யாக பதவி வகித்துள்ளேன். நான் பல பிரதமர்களை பார்த்துள்ளேன். ஆனால், மோடியை போன்ற இரக்கமற்ற கொடூரமான பிரமரை நான் பார்த்ததே இல்லை என தெரிவித்தார்.