அரசியல் இந்தியா

மேற்கு வங்க சிங்கப்பெண் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டார்.! நாடுமுழுவதும் எழுந்துவரும் கண்டனங்கள்.!

Summary:

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரு

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் மேற்கு வங்கம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் செய்துவிட்டு அவர் காரில் ஏற முயன்றபோது மம்தா பானர்ஜியை சிலர்  தள்ளிவிடப்பட்டுள்ளார். இது தொடர்பாக அளித்தப் பேட்டியில் காரில் ஏற முயன்றபோது தன்னை நான்கைந்து பேர் சேர்ந்து தள்ளிவிட்டதாகவும், இது திட்டமிட்ட தாக்குதல் எனவும் குறிப்பிட்டார். 

 இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கிக் கொண்டு காரில் ஏற்றி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 
 


Advertisement