இந்தியா

எம்புட்டு சேட்டை!! குட்டியை குளிக்கவைக்க தாய் குரங்கு நடத்தும் போராட்டம்!! வைரல் வீடியோ இதோ..

Summary:

தாய் குரங்கு ஒன்று தனது குட்டியை வலுக்கட்டாயமாக குளிப்பாட்டிவிடும் வீடியோ ஒன்று இணையத்தில்

தாய் குரங்கு ஒன்று தனது குட்டியை வலுக்கட்டாயமாக குளிப்பாட்டிவிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தாய்மை என்பதை மனிதர்களிடம் மட்டுமில்லாமல் அதனை விலங்குகளிடமும் காணமுடிகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த காட்சி அமைந்துள்ளது. இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசாந்த நந்தா அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தாய் குரங்கு தனது குட்டி குரங்கை குளிப்பாட்டிவிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

18 வினாடிகள் மட்டும் ஓடும் இந்த காட்சியில், குட்டி குரங்கு ஒன்று தனது தாய் குரங்கின் மடியில் அமர்ந்துகொண்டு குளிக்க வராமல் அடம் பிடிக்கிறது. வலுக்கட்டாயமாக அந்த குட்டி குரங்கை பிடித்து இழுத்து, தாய் குரங்கு அங்கிருக்கும் குட்டையில் முக்கி குளிக்கவைக்கிறது.

இருப்பினும் அந்த குட்டி குரங்கு அங்கிருந்து தப்பிக்க முயலும்நிலையில், அதனை மீண்டும் மீண்டும் இழுத்து, தனது குட்டியை தாய் குரங்கு குளிக்க வைக்கிறது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி அதிகம் வைரலாகிவருகிறது.


Advertisement