கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கயவனை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்.. பரபரப்பு சம்பவம்..!
கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபரை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை போவை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் வைத்யா (வயது 47). இவர் வீட்டிற்கு வேலையாட்களை சப்ளை செய்து நிர்வகிக்கும் பணியை செய்து வந்துள்ளார். அப்போது வேலை பார்த்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
அத்துடன் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசத்தை அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ராஜேஷ் வைத்யா வழக்கம் போல, பெண்ணின் வீட்டிற்கு சென்று உல்லாசம் அனுபவிக்கும் போது, திடீரென அங்கு வந்த அந்த பெண்ணின் மகன், இதனை கண்டு ஆவேசமடைந்து ராஜேஷ் வைத்யாவிடம் சண்டை போட்டிருக்கிறார்.
அத்துடன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறிய நிலையில், மனுஷ் நாயக், கத்தியை எடுத்து சரமாரியாக ராஜேஷை குத்தி இருக்கிறார். இதனால் ராஜேஷ் வைத்யா அங்கிருந்து எப்படியாவது தப்பி உயிர்பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியில் வந்தவர் வெகு தூரம் செல்ல முடியாமல் சாலையில் விழுந்துள்ளார்.
சாலையில் சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் அவரது உடல் கிடந்ததை பார்த்து, ராஜேஷ் வைத்யாவின் சகோதரருக்கு தகவல் கூறியுள்ளனர். இதையடுத்து ராஜேஷ் வைத்யாவின் சகோதரர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் ராஜேஷ் வைத்யா முன்பே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தீவிர விசாரணை செய்த காவல்துறையினர் கொலை செய்தது மனிஷ் நாயக் என கண்டறிந்தனர். மேலும் மனிஷ் நாயக் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.